ஹார்டிக் பாண்டியா எப்போது பந்துவீசுவார் ? ரோஹித் சர்மா பகிர்ந்த முக்கிய தகவல் – விவரம் இதோ

Rohith

இந்திய அணி தற்போது டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஆயத்தமாக பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. வரும் 24-ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் முதல் போட்டியில் விளையாடும் இந்திய அணி அதற்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் இரண்டு பயிற்சி போட்டிகளில் தற்போது மோதி வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கெதிரான 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-வது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

practice

இந்த இரண்டு பயிற்சிப் போட்டியிலும் இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா பந்து வீசவில்லை. இது தற்போது ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஹார்டிக் பாண்டியா நிச்சயம் பந்து வீசுவார் என்று பல காலமாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இன்றும் ஏமாற்றமே மிஞ்சியது.

- Advertisement -

மேலும் அவர் பேட்ஸ்மேனாக சிறப்பாக விளையாடினாலும் பந்துவீச்சில் தாக்கத்தை கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அணியின் நிர்வாகமும் விரும்புகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றைய பயிற்சி போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக விளையாடிய ரோகித் சர்மா அணியின் கேப்டனாக செயல்பட்டார். அதன்படி போட்டி துவங்கிய சிறிது நேரத்திற்கு பிறகு ஹார்டிக் பாண்டியா பந்து வீச்சு குறித்து பேசிய ரோகித் சர்மா கூறுகையில் :

pandya 1

இந்திய அணியில் ஆறாவது பௌலிங் ஆப்ஷ்னாக ஒருவர் நிச்சயம் தேவை. பவுலர்கள் சிறப்பாகவே பந்து வீசினாலும் ஒரு ஆப்ஷன் ஆறாவது பவுலர் தேவைப்படுகிறார். ஏனெனில் ஏதேனும் ஒரு நாள் பவுலர்களுக்கு மோசமாக அமையும்போது ஆறாவது பவுலர் நிச்சயம் போட்டியில் பெரிய அளவில் உதவுவார். தற்போதுவரை ஹார்டிக் பாண்டியா பந்து வீசவில்லை ஆனால் அவர் பந்து வீச தயாராகி வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : என்னங்க மேட்ச்க்கு மேட்ச் பொளக்குறாரு. இவர் ஆடறதா பார்த்தா – இந்திய அணியை ஒன்னுமே பண்ணமுடியாது

இன்னும் ஏன் அவர் பந்து வீசவில்லை என்று கேள்வி அதிகம் இருக்கிறது. நிச்சயம் உலக கோப்பை தொடர் துவங்கும் போது பாண்டியா பந்து வீச துவங்கி விடுவார் என தற்காலிக கேப்டன் ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் ஹார்டிக் பாண்டியா ஒரு சில ஓவர்கள் வீசி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement