என்னங்க மேட்ச்க்கு மேட்ச் பொளக்குறாரு. இவர் ஆடறதா பார்த்தா – இந்திய அணியை ஒன்னுமே பண்ணமுடியாது

Rahul-1
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய அணி இந்த உலக கோப்பை தொடரின் முதல் போட்டியாக வரும் 24-ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக தற்போது இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடி முடித்துள்ள இந்திய அணி இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலிய அணியை 9 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

shami

- Advertisement -

இந்த பயிற்சிப் போட்டிகளில் இந்திய அணியின் வீரர்கள் செயல்பாடு மிகவும் திருப்திகரமாக உள்ளதால் நிச்சயம் உலக கோப்பையில் இந்திய அணி கலக்கும் என்று எதிர்பார்க்கலாம். அந்த வகையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பலரும் பிரமாதமாக விளையாடி வரும் வேளையில் துவக்க வீரரான ராகுல் அட்டகாசமான பார்மில் இருக்கிறார்.

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் தனது பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் இந்தப் பயிற்சி போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இங்கிலாந்து அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் வேகமாக அரைசதம் கடந்த ராகுல் இன்றைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியிலும் 3 சிக்சர்களை பறக்கவிட்டு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Rahul 2

அவர் கிட்டத்தட்ட 20 பந்துகளில் பிடித்தாலே 35 ரன்களுக்கு மேல் துவக்கத்திலேயே அடிப்பதால் நிச்சயம் அது இந்திய அணிக்கு உதவும் என்பது மட்டுமின்றி ரன் குவிப்பையும் பெரிய அளவிற்கு எடுத்துச் செல்லும். இதன் காரணமாக நிச்சயம் இந்திய அணியின் மிகப்பெரிய பலமாக தற்போது ராகுல் மாறியுள்ளார். மேலும் தொடர்ச்சியாக அவர் இவ்வாறு அதிரடியாக விளையாடும் பட்சத்தில் நிச்சயம் உலக கோப்பை தொடரில் இந்திய அணி எப்பேர்ப்பட்ட ரன்களையும் சேசிங் செய்யும் நம்பிக்கையுடன் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : பயிற்சி போட்டியில் பட்டையை கிளப்பிய இந்திய ஓப்பனர்கள் – கடைசில கோலி சொன்னது தான் நடக்கும்போல

கடந்த சில ஆண்டுகளாகவே ராகுலின் பேட்டிங் அட்டகாசமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக டி20 போட்டிகளில் அவரது விளையாட்டு தற்போது இரு மடங்காக பலம் பெற்றுள்ளது. இவரின் பார்ம் நிச்சயம் இந்திய அணிக்கு பலத்தை சேர்த்துள்ளது என்றே கூறலாம். இது குறித்து உங்கள் கருத்து என்ன ?

Advertisement