பயிற்சி போட்டியில் பட்டையை கிளப்பிய இந்திய ஓப்பனர்கள் – கடைசில கோலி சொன்னது தான் நடக்கும்போல

Rahul

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது உலக கோப்பை தொடருக்கு முந்தைய பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற இந்திய அணியானது இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட ஆரம்பித்தது.

INDvsAUS Toss

இந்த போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வழக்கம்போல் ராகுல் 31 பந்துகளில் 3 சிக்ஸர் 2 பவுண்டரிகள் என அமர்க்களப்படுத்தி 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேற ரோகித் சர்மா நிலைத்து நின்று விளையாடினார். 41 பந்துகளை சந்தித்த அவர் 3 சிக்சர் மற்றும் 5 பவுண்டரி என 60 ரன்கள் எடுத்து ரிட்டயட் ஹர்ட் மூலம் வெளியேறினார்.

- Advertisement -

பின்னர் சூர்யகுமார் யாதவ் 27 பந்துகளில் 38 ரன்களும், ஹர்டிக் பாண்டியா 8 பந்துகளில் 14 ரன்கள் குவிக்க இந்திய அணியானது 17.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 153 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்களான ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோர் விளையாடிய விதம் மிகவும் பிரமாதமாக இருந்தது. குறிப்பாக பவுண்டரிகளை விளாசிய இவர்கள் இருவரும் சிறப்பான பார்மில் இருப்பது நன்றாக தெரிகிறது.

rohith 1

முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில் ரோஹித் 60 ரன்களில் ரிட்டயர்ட் ஆகி வெளியேறினார். ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷனும் ஆட்டமிழக்காமல் அதிரடியான அரைசதம் கடந்த நிலையில் தற்போது ரோஹித்தும் அரைசதம் கடந்தார். அதுமட்டுமின்றி ராகுலும் நல்ல பார்மில் உள்ளார் இதன் காரணமாக ஓப்பனிங்கில் இறங்கும் வீரர்கள் யார் ? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : பாண்டியா விஷயத்தில் பொறுமையை இழந்து விராட் கோலி எடுத்த அதிரடி முடிவு – நல்லா தான் இருக்கு

ஆனாலும் கோலி கூறியது போலவே ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தான் துவக்க வீரர்களாக கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் நிறைய அனுபவம் வாய்ந்த இவர்கள் இருவரும் தற்போது விளையாடி வரும் விதம் நிச்சயம் எதிரணிகளுக்கு அச்சுறுத்தல் தரும் அளவிற்கு பலமாக உள்ளது. இதன் காரணமாக நிச்சயம் விராட் கோலி கூறியது போலவே துவக்க வீரர்களாக ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் இறங்குவது உறுதியாகியுள்ளது.

Advertisement