பாண்டியா விஷயத்தில் பொறுமையை இழந்து விராட் கோலி எடுத்த அதிரடி முடிவு – நல்லா தான் இருக்கு

Kohli
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்கு முன்னர் தற்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டியில் மோதி வருகிறது. இதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் 189 ரன்களை அபாரமாக சேசிங் செய்து வெற்றி பெற்ற இந்திய அணியானது இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் பயிற்சி போட்டியில் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

IND

- Advertisement -

கிட்டத்தட்ட வெற்றியை நோக்கி இந்திய அணி நெருங்கிவிட்ட நிலையில் கடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசாத இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா இன்றாவது பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் உலக கோப்பை தொடரில் நிச்சயம் ஹார்டிக் பாண்டியா பந்துவீச வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்திய அணிக்கு நிச்சயம் 6-ஆவது பவுலிங் ஆப்ஷன் அவசியம் என்கிற காரணத்தினால் அவர் இன்றைய போட்டியிலாவது பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இன்றைய போட்டியிலும் ஹார்டிக் பாண்டியா பந்து வீசவில்லை. ஒரு கட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சில் கேப்டன் விராட் கோலியே முன்வந்து 2 ஓவர்கள் பந்துவீசி 12 ரன்கள் கொடுத்தார்.

shami

ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் 2016ஆம் ஆண்டு பந்துவீசிய விராத் கோலி அதன் பிறகு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து இன்றைய போட்டியில் பந்து வீசினார். இதன் மூலம் நிச்சயம் உலக கோப்பை தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் ஒரு சில ஓவர்களை தள்ள வேண்டும் என்றால் அந்தக் கட்டத்தில் கேப்டன் கோலி பந்துவீச வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பையை ஜெயிக்க இந்த அணிக்கு தான் வாய்ப்பு அதிகம் – மைக்கல் வாகன் கணிப்பு

இருப்பினும் ஹார்திக் பாண்டியாவின் பிட்னஸ் எந்த அளவுக்கு உள்ளது என்பது இதுவரை ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement