அவருக்கு என்னோட வீக்னஸ் என்னனு நல்லா தெரியும். அதான் என்னை அவுட் ஆகிட்டாரு – ரோஹித் ஓபன்டாக்

rohith 1
- Advertisement -

ஜெய்ப்பூர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது 164 ரன்கள் குவிக்க பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

bhuvi 1

- Advertisement -

இந்த போட்டியில் சேசிங்கின் போது ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோர் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வழக்கம் போல் அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி கடந்த 3 போட்டிகளில் 50 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்ததை போன்று இந்த போட்டியிலும் முதல் 5.1 ஓவர்களில் 50 ரன்கள் சேர்த்தனர். அப்போது ராகுல் 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 36 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்கள் என 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் 48 ரன்கள் எடுத்திருந்தபோது டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் போட்டி முடிந்து தனது விக்கெட் விழுந்த விதம் குறித்து பேசிய அவர் டிரென்ட் போல்ட் பந்தில் தான் ஆட்டமிழந்தது பற்றியும் பேசியிருந்தார்.

boult

இதுகுறித்து அவர் கூறுகையில் : எனது வீக்னஸ் என்ன என்று டிரென்ட் போல்ட்க்கு நன்றாக தெரியும். அதே போன்று அவருடைய ஸ்ட்ரென்த் என்ன என்று எனக்கு நன்றாக தெரியும். இது ஒரு பேட்ஸ்மேன் மற்றும் பவுலருக்கு இடையேயான மோதல் தான். நான் அவரை கேப்டனாக வழிநடத்திய போதெல்லாம் சில திட்டங்களை வகுத்து கொடுப்பேன். அந்த வகையில் அவர் அதே திட்டத்தை சிறப்பாக என்மீது செயல்படுத்தி உள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : நியூசிலாந்து அணிக்கெதிரான இந்த சிறப்பான வெற்றிக்கு இவர்களே காரணம் – புதுகேப்டன் ரோஹித் பேட்டி

மிட்விக்கெட்டில் இருந்த பீல்டரை பின்னால் தள்ளி, பைன் லெக் பீல்டரை உள்ளே கொண்டுவந்து நிற்க வைத்தார். அப்போதே அவர் பவுன்சர் வீச போகிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். அதனால் பைன்லெக் பீல்டுக்கு பின்னால் தூக்கி அடிக்கலாம் என்று அடித்தேன். ஆனால் அவரது பந்தில் போதிய வேகம் இல்லாததால் அது நேராக பீல்டரின் கைகளுக்கு சென்றது என ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement