நாம் இயல்பு நிலைக்கு திரும்ப இதனை செய்தே ஆக வேண்டும். கடவுள் துணை நிற்பார் – மனமுருகிய ரோஹித்

Rohith
- Advertisement -

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் அந்நாட்டை பாதித்தது மட்டுமின்றி தற்போது உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக பாதித்து அச்சத்தை உண்டாக்கி வருகிறது. இந்தியாவையும் விட்டுவைக்காத இந்த வைரஸ் இந்தியாவிலும் தற்போது பரவி வருகிறது.

corona

- Advertisement -

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 80க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவிவரும் நிலையில் அது தொடர்பான விழிப்புணர்வுகளை பிரபலங்களும், அரசியல்வாதிகளும், முக்கிய நபர்கள் என பலதரப்பட்டவர்களும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மாவும் விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக இந்திய மக்களுக்கு ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். அதில் ரோகித் சர்மா கூறியதாவது:

 

View this post on Instagram

 

Stay safe everyone.

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

நான் சில விஷயங்களை பேசப்போகிறேன். கடந்த சில வாரங்களாக உலகில் இருக்கும் அனைவருக்கும் கொரோனா வைரஸ் கடினமான ஒன்றாக மாறி நம்மை ஸ்தம்பிக்க வைத்து இருக்கிறது. நாம் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்ப ஒன்று சேர்ந்து கொரோனா வைரசுக்கு எதிராக நிற்க வேண்டும்.

- Advertisement -

அதற்காக நாம் சிலவற்றை செய்ய வேண்டும். உங்களுக்கு நோய் அறிகுறி எதுவும் தென்பட்டால் உடனே அருகில் இருக்கும் மருத்துவரை அணுகுங்கள். ஏனென்றால் நம் அனைவரது குழந்தைகளும் பள்ளிக்கு செல்லவேண்டும், மால்களுக்கு, திரையரங்குகளுக்கும் செல்ல வேண்டும். உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் நான் மிகவும் மதிக்கிறேன்.

அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன். இறுதியாக ஒன்று கொரோனா வைரசால் இறந்தவர்களுக்கு எனது இதய பூர்வ இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement