
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி தற்போது லீட்ஸ் மைதானத்தில் கடந்த 25 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் 3 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 78 ரன்களையும், இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 432 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்தது.
இந்த தொடர் முழுவதுமே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் இந்த 3 ஆவது போட்டியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று பெரிதளவில் விமர்சிக்கப்பட்ட புஜாரா இந்த இரண்டாவது இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 180 பந்துகளில் 91 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
இதன் காரணமாக இன்றைய போட்டியில் அவர் சதம் அடித்து மேலும் பெரிய ரன் குவிப்பிற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. அவரின் இந்த அதிரடியான ஆட்டம் தற்போது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்பில் புஜாரா குறித்து சில விடயங்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் :
புஜாரா கடந்த சில தொடர்களாகவே சிறப்பாக செயல்படவில்லை என்று அவரை கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆனால் சில போட்டிகளில் அவர் சரியாக விளையாடவில்லை என்றாலும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவர் அமைத்த பாட்னர்ஷிப்பை மறந்துவிடக்கூடாது.
ஆஸ்திரலிய தொடரிலும் புஜாரா சிறப்பாகவே ஆடி இருந்தார். இதனால் அவர் மீது கூறப்படும் விமர்சனம் எனக்கு ஏற்புடையதல்ல என்று ரோகித் அவருக்கு சப்போர்ட் செய்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.