நான் இந்த ஐ.பி.எல் தொடருக்கு கிளம்பும் முன் 9 பேட்டுகளுடன் தயாரானேன் – ரோஹித் சர்மா பேட்டி

Rohith

ஐபிஎல் தொடர் துவங்கி தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது வரை எட்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துவிட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது. ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.

உயிர் பாதுகாப்பு வளையம் என்னும் பாதுகாப்பு வளையத்துக்குள் தான் வீரர்கள் பயிற்சியாளர்கள் அனைவரும் தற்போது வரை இருந்துவருகின்றனர். மேலும் வீரர்களின் உபகரணங்களும் அவ்வப்போது பழுதடைவது வழக்கமான ஒன்று. இதன் காரணமாக பல வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களுக்கு தேவையான உபகரணங்களை கூடுதலாக மற்றும் அதிகபட்சமாக எடுத்து வந்து இருக்கின்றனர்.

இதில் ரோகித் சர்மா ஒரு படி மேலே போய் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மொத்தம் 9 பேட்கள் எடுத்து வந்ததாக கூறியிருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தது 40 முதல் 60 பந்துகளில் பிடிக்க வேண்டிய நிலைமை ஏற்படும், ஒரு சில போட்டிகளில் பலமாக விளையாடும் போது பேட் உடைந்து போய் விடலாம். அதனால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களை தேட முடியாது.

rohith 1

மேலும் இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 பேட்களை எடுத்து வந்தேன் என்று கூறியிருக்கிறார். அவர் கூறுகையில் “ஆடும் லெவனில் இருக்கும் வீரர்கள் இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். நம் அணியில் இருப்பது எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதை உணரவேண்டும்.

- Advertisement -

நாமும் அப்படித்தான் அவர்களிடம் பேச வேண்டும். நான் இங்கு வருவதற்கு முன்னர் 9 பேட்டுகளை எடுத்து வந்திருக்கிறேன். இது பாதுகாப்பிற்காக தான் பழுதடைந்து விட்டால் உடனடியாக மாற்றிக் கொள்வேன். இவற்றையெல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன்” என்று தெரிவித்திருக்கிறார் ரோகித் சர்மா.