ஐபிஎல் தொடரின் 13 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும். கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 45 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். மேலும் இறுதி நேரத்தில் பாண்டியா மற்றும் பொல்லார்ட் ஆகியோர் அதிரடியாக விளையாட அந்த 191 ரன்கள் குவித்தது.
அதன் பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 44 ரன்களும். மயங்க் அகர்வால் 25 ரன்கள் குவித்தனர் இதன் காரணமாக மும்பை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் கூறுகையில் : இந்த போட்டியின் வெற்றி ஒரு சிறப்பான வெற்றி ஆகும். நாங்கள் சிறப்பாக துவங்கவில்லை இருந்தாலும் பஞ்சாப் அணியின் பவுலர்களை நாங்கள் எதிர்த்து அடிக்க முடியும் என்பதை அறிந்திருந்தோம். பொல்லார்ட் மற்றும் பாண்டியா ஆகியோர் ரன்களை அதிரடியாக குவித்தனர். அவர்கள் அணியில் இருப்பது எங்களுக்கு மிகவும் நல்லது.
பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்து வீசுவது என்பது எளிது கிடையாது. இருப்பினும் போட்டியின் ஆரம்பத்தில் விக்கெட்டை எடுத்தால் நாங்கள் வெற்றிபெறுவோம் என்ற திட்டம் எங்களிடம் இருந்தது. இந்த போட்டியில் பந்து வீச்சில் நாங்கள் சரியாக செயல்பட்டோம் கடைசி நேரத்தில் அணிகளுக்கு ரன்கள் கிடைத்தது மிகவும் அருமையான விஷயம் இந்த விடயமே போட்டியை மாற்றியது என்று ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.