இந்த மாதிரி கன்டிஷன்லயும் சூப்பரா பவுலிங் போடுறாரு. அவர்கிட்ட செம ஸ்கில் இருக்கு – ரோஹித் புகழாரம்

Harshal-2
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜெய்ப்பூரில் நடந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்த வேளையில் நேற்று ராஞ்சி மைதானத்தில் 2வது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ரோகித் முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி சிறப்பான தொடக்கத்தை அளித்தது. அதிரடியாக விளையாடிய குப்தில் மற்றும் மிட்சல் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 4.2 ஓவர்களில் 48 ரன்கள் குவித்தனர்.

guptill

- Advertisement -

முதல் விக்கெட்டாக குப்தில் 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேற அடுத்ததாக பின் வந்த வீரர்களும் சற்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் 10 ஓவர்களில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 80 ரன்களுக்கு மேல் குவித்து வலுவான நிலையில் இருந்தது. எப்படியும் நியூசிலாந்து அணி 180 ரன்கள் வரை அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இறுதியில் நியூசிலாந்து அணியை 153 ரன்களுக்குள் சுருட்டினர்.

அதிலும் குறிப்பாக கடைசி 4 ஓவர்களில் வெறும் 25 ரன்கள் மட்டுமே வந்தது. அது தவிர அந்த நான்கு ஓவர்களில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்கப்பட்டது. இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேல் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். முக்கியமான கட்டத்தில் துவக்க வீரர் மிட்சலை ஆட்டமிழக்க வைத்த அவர் அதிரடியாக விளையாடி கொண்டிருந்த கிளென் பிலிப்ஸையும் ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றினார்.

Harshal-1

மைதானத்தில் பனிப்பொழிவு காரணமாக பந்து அதிகமாக வழுக்கி சென்றது. இருப்பினும் அவர் இந்த மைதானத்திலும் சுதாரித்து 4 ஓவர்கள் வீசி அவர் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. இதனை போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மாவும் சுட்டிக்காட்டினார். ஹர்ஷல் பட்டேலின் பந்து வீச்சு குறித்து பேசிய அவர் :

- Advertisement -

இதையும் படிங்க : நான் ஒரே வார்த்தையை வீரர்களிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். அதுவே வெற்றிக்கு காரணம் – ரோஹித் மகிழ்ச்சி

இதுபோன்ற மைதானத்தில், இதுபோன்ற ஒரு கண்டிஷனில் பந்து வீசுவது கடினம். ஆனால் இந்த மைதானத்திலும் ஹர்ஷல் படேல் சிறப்பாக செயல்பட்டார். அதுமட்டுமின்றி பனிப்பொழிவு காரணமாக பந்துகள் நழுவினாலும் இந்த சூழ்நிலையிலும் அவர் சிறப்பாக ஸ்லோ பால்களை வீசினார். நிச்சயம் அவர் ஒரு ஸ்கில் உள்ள பவுலர் என்பதை மீண்டும் மீண்டும் டி20 போட்டிகளில் வெளிக்காட்டி வருகிறார் என கேப்டன் ரோகித் சர்மா அவரை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement