அவுட் கொடுத்த விரக்தியில் அம்பயரை திட்டிய ரோஹித் சர்மா. நடவடிக்கை எடுக்கவுள்ள நிர்வாகம் – வைரலாகும் வீடியோ

Rohith

ஐபிஎல் தொடரின் 17ஆவது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் முதலில் ராகுல் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ய மும்பை அணி களம் இறங்கி விளையாடியது அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் டிகாக் ஆகியோர் சிறப்பான ரன் குவிப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிகாக் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

sky

அடுத்து வந்த இஷான் கிஷன் 6 ரன்களில் வெளியேறினார். பின்னர் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோகித்சர்மா கூட்டணி நிதானமாக விளையாடி பொறுமையாக ரன்களை சேர்த்து வந்தது. இருப்பினும் அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின்பு அடுத்து வந்த வீரர்களாலும் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை என்பதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 131 ரன்களை மட்டுமே குவித்தது. ரோஹித் அதிகபட்சமாக 63 ரன்களை குவித்தார்.

அதனை தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் தங்களது 2-வது வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டியின்போது முதல் ஓவரில் மொய்செஸ் ஹென்றிக்ஸ் வீசிய பந்தில் ரோகித் சர்மா ஆட்டம் இழந்ததாக அம்பயர் அறிவித்தார்.

rohith 1

பந்து பேட்டில் பட்டு சென்றது என்று நினைத்து அம்பயர் அவுட் என்று அறிவித்த உடனேயே ரோகித் சர்மா உடனே கோபப்பட்டார். பந்து பேட்டில் படவில்லை என்றும் மூன்றாவது அவருக்கு செல்லும்படி ரிவ்யூ எடுத்தார். மேலும் ரிவ்யூ எடுத்தது மட்டுமின்றி ஒரு நொடி கூட யோசிக்காமல் களத்தில் இருந்த அம்பயரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரை நோக்கி சில ஆவேசமான வார்த்தைகளை கூறி கத்தினார்.

- Advertisement -

ரோகித் சர்மாவின் இந்த செயல் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. மேலும் போட்டியில் விதிமுறைகளை மீறும் வகையில் ரோகித் நடந்து கொண்டதால் நிச்சயம் அவருக்கு அபராதம் விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.