CSK vs MI : சென்னையை வீழ்த்த ரோஹித் போட்ட மாஸ்டர் பிளான் – இதுதான்

ஐ.பி.எல் தொடரின் பிளேஆப் குவாலிபயர் 1 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும்

Rohith
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் பிளேஆப் குவாலிபயர் 1 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை 131 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ராயுடு 42 ரன்களும், தோனி 37 ரன்களை குவித்தனர். சாகர் 4 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பிறகு 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 71 ரன்களை குவித்தார். மேலும் ஆட்டநாயகன் விருதினையும் தட்டிச்சென்றார்.

இந்த போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்கு ரோஹித் சர்மாவின் சிறப்பான செயல்பாடே காரணம். ஏனெனில், முதலில் டாஸ் வென்ற தோனி பேட்டிங்கை தேர்வு செய்து அதிர்ச்சி அளித்தார். இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட ரோஹித் தனது சிறப்பான திட்டத்தால் சென்னை அணியை பவர்ப்பிளே ஓவர்களிலே காலி செய்தார்.

- Advertisement -

முதல் ஓவரை மலிங்காவிடம் கொடுத்த ரோஹித் அதற்கடுத்த இரண்டாவது ஓவரை க்ருனால் பாண்டியாவை வீச செய்தார். பிறகு மீண்டும் 3 ஆவது ஓவரை மலிங்கா வீசுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த ஓவரை ராகுல் சாகர் வீசினார். அந்த ஓவரில் டுப்ளிஸிஸ் அவுட் ஆனார். அதற்குஅடுத்த 4 ஆவது ஓவரை ஜெயந்த் யாதவ் வீசினார் அந்த ஓவரில் ரெய்னா அவுட் ஆனார். பிறகு 5 ஆவது ஓவரை பும்ரா வீசினார்.

bumrah

எனவே முதல் 5 ஓவர்களில் ஒரே பவுலர்களை வீசவைக்காமல் 5 பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்தி சென்னை அணிக்கு நெருக்கடி அளித்தார். இதனால் பவர்பிளே ஓவர் முடிவிலே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியது மும்பை அணி. பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றி உபயோகப்படுத்த நினைத்த ரோஹித்தின் இந்த மாஸ்டர் பிளான் நேற்றைய போட்டியில் வெற்றியை பெற்றுத்தந்தது என்று கூறலாம்.

Advertisement