டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் யாரும் தொடாத உச்சத்தை தொட்ட ரோஹித் – உண்மையிலே இவர் ஹிட்மேன் தான்

rohith 1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்ற போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 184 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்து அணி 111 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன்காரணமாக இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ind

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 31 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என 56 ரன்கள் அடித்து அசத்தினார். இந்த அரைசதம் ரோகித் சர்மாவிற்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 26வது அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதையும் தாண்டி தற்போது இந்திய வீரர்கள் யாரும் படைக்காத ஒரு சாதனையை ரோகித் சர்மா இந்திய அணி சார்பாக படைத்துள்ளார். அந்த சாதனை யாதெனில் இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் யாரும் 100 சிக்ஸர்கள் கூட அடிக்காத நிலையில் நேற்றைய போட்டியில் ரோஹித் அடித்த 3 சிக்ஸரோடு சேர்த்து முதல் நபராக அவர் 150 சிக்ஸர்களை அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பதிவு செய்துள்ளார்.

Rohith

இந்த பட்டியலில் அதிகபட்ச சிக்ஸர்களை அடித்த வீரராக நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் மார்டின் கப்தில் 169 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து தற்போது ரோகித் 150 சிக்சருடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் கெயில் 124 சிக்ஸர்களுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : ஷாருக்கானின் ஆட்டத்தை பிரமிப்புடன் கண்ட தல தோனி. கடைசி பந்தில் சிக்ஸர் – கோப்பையை வென்ற தமிழ்நாடு

3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் போட்டியில் 48 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா அடுத்த இரு போட்டிகளிலும் அரைசதம் விளாசி அசத்தியிருந்தார். இதன்காரணமாக அவருக்கு தொடர்நாயகன் விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement