ஷாருக்கானின் ஆட்டத்தை பிரமிப்புடன் கண்ட தல தோனி. கடைசி பந்தில் சிக்ஸர் – கோப்பையை வென்ற தமிழ்நாடு

Dhoni
- Advertisement -

இந்தியாவில் கடந்த 4-ஆம் தேதி துவங்கிய உள்ளூர் தொடரான சையது முஷ்டாக் அலி டிராபியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. மாநில அணிகளுக்கு இடையே மிக முக்கியமான தொடராக பார்க்கப்படும் இந்த சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான தமிழக அணியும், கர்நாடக அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய கர்நாடக அணியானது 20 ஓவர்களின் முடிவில் 151 ரன்களை குவித்தது.

அடுத்ததாக 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைத்தாலும், மிடில் ஆர்டரில் ஏற்பட்ட சொதப்பல் காரணமாக சரிவை சந்தித்த தமிழக அணியானது இறுதியில் ஷாருக்கானின் அதிரடி ஆட்டம் மூலம் வெற்றியை ருசித்தது. 16-வது ஓவரில் களமிறங்கிய ஷாருக்கான் இறுதிவரை களத்தில் நின்று 15 பந்துகளில் 33 ரன்களை குவிக்க தமிழக அணியானது கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷாருக் கான் அடித்த சிக்ஸர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி அவருக்கான பாராட்டுகளும் தற்போது இந்தியா முழுவதும் இருந்து குவிந்து வருகிறது. ஏற்கனவே தமிழக அணிக்காக பினிஷர் ரோலில் இறங்கி அதிரடியாக விளையாடி வரும் ஷாருக்கானின் ஆட்டம் பெரிதளவு பேசப்பட்டது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் மீண்டும் தற்போது தமிழக அணிக்காக பினிஷராக களமிறங்கி இறுதிப்போட்டியில் சிக்சர் அடித்து வெற்றி பெற்று கொடுத்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : ஷாருக்கான் கடைசி பால் சிக்ஸ். சையத் முஷ்டாக் அலி தொடரை வென்ற தமிழக அணி – வைரலாகும் வீடியோ

இந்நிலையில் இந்த போட்டியை தொலைக்காட்சி நேரலையில் கண்டுகளித்த தோனி ஷாருக் கான் அடித்த கடைசி சிக்ஸரை பார்த்து நிற்கும் படியான ஒரு புகைப்படத்தை சி.எஸ்.கே அணி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் தோனி ஷாருக் கானின் ஆட்டத்தை பார்த்து தோனி ரசித்தபடி நிற்கிறார். அதோடு சேர்த்து ஒரு சிறந்த பினிஷேர் மற்றொரு பினிஷரின் ஆட்டத்தை பார்த்தபோது என்ற கேப்ஷனுடன் இந்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement