இந்த வருட ஐ.பி.எல் தொடரின் இறுதி போட்டிக்கு மும்பை சென்றாலும் ரோஹித் விளையாட மாட்டாராம் – காரணம் இதுதான்

Rohith
- Advertisement -

மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா இடது தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக பொல்லார்ட் அணியின் கேப்டனாக விளையாடினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நேற்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாடவில்லை.

rohith

மேலும் காயம் காரணமாக சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்ட ஆஸ்திரேலிய தொடருக்கான மூன்றுவிதமான அணியிலும் ரோஹித்துக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் ரோஹித் காயம் காரணமாக இடம்பெறவில்லை என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது. ஆனால் பிசிசிஐ அப்படி தெரிவித்த அடுத்த நாளே ரோஹித் வலைப் பயிற்சியில் ஈடுபட்ட ஒரு புகைப்படத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டது.

- Advertisement -

இந்த புகைப்படம் வெளியான போது ரோஹித்துக்கு உண்மையிலேயே காயம் ஏற்பட்டதா ? வேறு ஏதாவதா ? என்பதுபோல் ஒரு கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் ரோஹித்தின் காயம் குறித்த தன்மை எனக்கு முழுவதும் தெரியாது. அவரின் காயத்தின் தன்மையை நிச்சயம் தெளிவாக சொல்ல வேண்டும் என்றும் பலரும் கேட்டிருந்தனர். கவாஸ்கரும் அவரது உடற்தகுதி குறித்த தெளிவான தகவலை வெளியிடுமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.

rohith 1

இந்நிலையில் முழுமையாக காயம் குணமடையாத நிலையில் மீண்டும் உடற்பயிற்சி பயிற்சியைத் தொடங்கிய ரோகித் சர்மாவின் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறியதால் தற்போது பிசிசிஐ அவரின் உடற் தகுதியை பரிசோதித்து உள்ளனர். அப்படி நடத்தப்பட்ட பரிசோதனைக்கு பிறகு பிசிசிஐயின் தரப்பில் கூறப்பட்ட தகவலில் ரோகித் சர்மாவிற்கு காயம் குணமைடைய குறைந்தது மூன்று வாரங்கள் ஓய்வு தேவை.

- Advertisement -

ஆஸ்திரேலியா செல்லும் வீரர்கள் அனைவரது உடற்பகுதியும் விரைவில் நாங்கள் சமர்ப்பிப்போம். இது வழக்கமான நடைமுறைதான். யாரெல்லாம் உடல் தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது விரைவில் தெரியவரும் ரோஹித்தை பரிசோதித்ததில் மூன்று வாரங்கள் வரை நிச்சயம் அவருக்கு ஓய்வு தேவை என்று கூறியுள்ளனர். இதனால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ரோகித் இணைவது குறித்து சந்தேகம்தான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

rohith 2

இந்நிலையில் இந்த வருட ஐ.பி.எல் தொடரின் இறுதி போட்டிக்கு மும்பை அணி தகுதி பெற்றாலும் ரோஹித் அந்த இறுதி போட்டியிலும் ரோஹித் விளையாடமாட்டார். ஏனெனில் இன்னும் அவருடைய காயம் குணமையடைய 3-4 வாரங்கள் ஆகும் என்று பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. அதன் காரணமாக ரோஹித் இந்த தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடமாட்டார் என்று தெளிவாகியுள்ளார்.

Advertisement