ரோஹித் சர்மா எவ்ளோ பெரிய ஹிட்டர்னு நமக்கெல்லாம் தெரியும் – ஆனா அவருக்கு இப்படி வியாதி இருக்கா ?

Rohith

உலகிலேயே மிகச் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளங்கும் இந்திய அணியின் வீரரான ரோஹித் சர்மா, ஒரு மிகப் பெரிய ஞாபக மறதிக்காரர் என்பது ஒரு வேடிக்கையான விடமாயகத்தான் இருக்கிறது. அந்த ஞாபக மறதி பிரச்சனையால் ரோஹித் சர்மா செய்த ஒரு தவறை அணியில் இருந்த மற்ற வீரர்களிடம் கூறி அதை ஒரு பெரிய செய்தியாகவே இந்திய அணியின் கேப்டனான விராட் கோஹ்லி மாற்றிவிட்டார் என்ற சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

Rohith-1

தன்னுடைய ஞாபக மறதி பிரச்சனையால் லேப்டாப், ஐபேட், பாஸ்போர்ட் போன்றவற்றை தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலேயே மறந்து விட்டு செல்லும் ரோஹித் சர்மா ஒருமுறை தன்னுடைய திருமண மோதிரத்தைக்கூட கூட தங்கி இருந்த அறையிலேயே மறந்துவிட்டுச் சென்ற வேடிக்கையான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த ரோஹித் சர்மா, எனக்கு எப்போதுமே தாமதமாக எழுந்து அவசர அவசரமாக விமானத்தை பிடிப்பது வாடிக்கையாகிவிட்டது.

- Advertisement -

எனவே மற்ற வீரர்கள் எழும்போது என்னுடைய அறைக் கதவை தட்டி என்னையும் எழுப்பி விடுமாறு சொல்லிவிடுவேன். அதேபோல இரவு தூங்குவதற்கு முன்பு என்னுடைய திருமண மோதிரத்தை கழட்டி வைத்துவிட்டு காலையில் எழுந்தவுடன் அணிந்து கொள்ளும் பழக்கமும் என்னிடம் இருக்கிறது. அப்படி ஒரு முறை ஹோட்டல் அறையில் தங்கி இருந்தபோது கழட்டி வைத்த மோதிரத்தை அறையிலேயே மறந்துவைத்துவிட்டு, அவசர அவசரமாக சென்று பேருந்தில் ஏறிவிட்டேன்.

Rohith

பிறகு என்னுடைய மோதிரத்தை அறையிலேயே மறந்து வைத்துவிட்டேன் என்று தெரிந்துகொண்ட நான், அது உமேஷ் யாதவின் விரலில் இருந்ததையும் பார்த்துவிட்டேன். உடனடியாக இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் என் மோதிரத்தை அவரிடம் இருந்து வாங்கித் தருமாறு நான் ஹர்பஜன் சிங்கிடம் கூறினேன்.

- Advertisement -

Samaira

இதனை தெரிந்து கொண்ட விராட் கோஹ்லி, அணியில் இருந்த மற்ற வீரர்களிடம் இதைப் பற்றி கூறி, அதை ஒரு பெரிய செய்தியாகவே மாற்றிவிட்டார் என்று ரோஹித் சர்மா கூறியிருக்கிறார். கடந்த 2015ஆம் ஆண்டு தன்னுடைய தோழியான ரித்திகாவை ரோஹித் சர்மா திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு சமைரா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

Advertisement