இன்னும் 2 ரன்கள் அடிச்சாலே போதும். ரோஹித் ஐ.பி.எல் வரலாற்றில் இடம்பிடிப்பது உறுதி – விவரம் இதோ

Rohith
- Advertisement -

ரோகித் சர்மா ஐபிஎல் தொடர்களில் பல சாதனைகள் படைத்துள்ளார். ஒரு கேப்டனாக அதிக ஐபிஎல் கோப்பையை வென்ற ஒரே வீரர் இவர்தான். மும்பை அணிக்காக ரோஹித் சர்மா கேப்டனாக மொத்தம் நான்கு ஐபிஎல் கோப்பையை வென்று இருக்கிறார். சமீபத்தில் கூட 200 சிக்சர்கள் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா பெரிதாக ஆடவில்லை. ஆனால் ஒரு சிக்சர் அடித்து இருந்தார். இதன் மூலம் மும்பை அணிக்காக 150 சிக்சர்கள் விளாசிய இரண்டாவது வீரராக மாறினார் ரோகித் சர்மா. முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கைரன் பொல்லார்ட் 150 சிக்சர்கள் அடித்து இருக்கிறார்.

- Advertisement -

ரோஹித் சர்மாவைவிட பொல்லார்ட் மிகப்பெரிய அதிரடி வீரர் என்பதாலும் பின்வரிசையில் இறங்குவதாலும் அவர் இத்தனை சிக்ஸர்களை அடித்ததில் ஆச்சரியமில்லை. அவருக்கு அடுத்து துவக்க வீரராக விளையாடி வரும் ரோஹித் 10 சிக்ஸர்களை அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும் மும்பை அணியின் ரன் குவிப்பிற்காக ஆண்டுதோறும் தவறாமல் அதிகளவு ரன்களை ரோஹித் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த போட்டியில் ரோகித் சர்மா 10 ரன்கள் எடுத்திருந்தால் 5000 ஐபிஎல் ரன்களை கடந்த வீரர் ஆக மாறி இருப்பார். ஆனால் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதன் காரணமாக 2 ரன் வித்தியாசத்தில் அந்த சாதனையை பறிபோனது. ஐபிஎல் தொடரில் விராட் கோலி 5430 ரன்கள் அடித்து முதலிடத்திலும் சுரேஷ் ரெய்னா 5368 ரன்கள் அடித்து இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.

rohith 1

இந்திய வீரர்களான கோலி மற்றும் ரெய்னா ஆகியவர்களுக்கு அடுத்து ரோஹித் 4998 ரன்களுடன் ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் அவர்கள் இருவருக்கும் அடுத்த இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement