விதிமுறைகளை மீறிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் – விவரம் இதோ

Rohith

நடப்பு ஐபிஎல் தொடரின் 13வது லீக் மேட்ச் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையில் நடந்தது. முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 137 ரன்கள் எடுத்தது. 2வது இன்னிங்சை ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 138 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது டெல்லி அணி.

mivsdc

இந்தப் போட்டியில் 2-வது இன்னிங்சில் பந்துவீசிய மும்பை அணி, ஐபிஎல் விதிமுறைகளின்படி, பந்து வீசுவதற்கு வழங்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டது. எனவே அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தாமதமாக பந்து வீசுவதால் அணி கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்படும் இந்த முறையானது இந்த தொடரில் இரண்டாவது நிகழ்வாகும்.

இதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு டெல்லிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் அவருக்கும் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

mi

இந்த தொடரில் மும்பை அணி தாமதமாக பந்து வீசுவது இதுவே முதல்முறை என்பதால் அணியின் கேப்டனுக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . ஐபிஎல் விதிமுறைகளின்படி நடப்பு தொடரில் இது போன்ற நிகழ்வு இரண்டாவது முறை நடந்தால் அணியின் கேப்டனுக்கு 24 லட்சம் ரூபாயும் மற்ற வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 25% அல்லது ஆறு லட்சம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும்.

- Advertisement -

boult

மேலும் மூன்றாவது முறையும் இதே தவறை செய்தால் அணியின் கேப்டனுக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்படும். மேலும் மற்ற வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அல்லது 12 லட்சம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும்.