என்னுடன் களமிறங்கப்போகும் புது ஓப்பனர் இவர்தான். வேறு வழியில்லை – கேப்டன் ரோஹித் அறிவிப்பு

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் முதலாவதாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் முழுவதும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி நாளை பிப்ரவரி 6ஆம் தேதி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறது.

INDvsWI

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடருக்கான ஒருநாள் அணி அறிவிக்கப்பட்ட பின்னர் வீரர்கள் அகமதாபாத் சென்று பயோ பபுளில் இருந்து பயிற்சியை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணியின் துவக்க வீரர்களான ஷிகர் தவான் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

அதே வேளையில் இந்திய அணியின் துணை கேப்டனான ராகுல் தனது சகோதரியின் திருமணம் காரணமாக முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்றும் இரண்டாவது போட்டியில் இருந்து விளையாடுவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இதன் காரணமாக ரோஹித் சர்மாவுடன் யார் துவக்க வீரராக இந்த முதலாவது போட்டியில் களமிறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்தது.

ishan
ishan MI

தற்போது அதற்கு விடையாக கேப்டன் ரோகித் சர்மா தனது பதிலை வெளிப்படையாக அறிவித்துள்ளார். அதன்படி அவர் ஏற்கனவே இந்திய அணியில் இடம்பிடித்த ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளதால் அகர்வால் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

- Advertisement -

ஆனால் தற்போது மாயங்க் அகர்வால் அணியுடன் இணைவதற்கு முன்னர் குவாரன்டைனில் இருந்து வருவதால் முதலாவது போட்டியில் இஷான் கிஷன் தான் தம்முடன் துவக்க வீரராக களம் இறங்குவார் என்று ரோகித் சர்மா உறுதி செய்துள்ளார். மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் ராகுல் அவருடன் இணைந்து விளையாடுவார் என்றும் ரோஹித் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND vs WI : வெ.இ அணிக்கு எதிராக அதிக ரன்கள், சதங்கள், விக்கெட்கள் எடுத்த டாப் இந்தியர்களின் பட்டியல்

இந்திய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான இஷான் கிஷன் கடந்த ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் விளையாடிய முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்து அசத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement