ஓய்வுபெற்ற இந்த 2 வீரர்கள் என் அணியில் இருந்தால் நல்லா இருக்கும் – ரோஹித் ஓபன் டாக்

MI

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான ரோகித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக பார்க்கப்படுகிறார். அவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 15, 17 மற்றும் 19 ஆகிய நான்கு சீசன்களில் டைட்டில்களை வென்றது. மேலும் ரோகித் சர்மா தோனியை விட ஒரு கோப்பையை அதிகமாக கைப்பற்றி அதிகக் கோப்பைகள் கைப்பற்றிய கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார்.

அவரது அதிரடியான ஆட்டம் மற்றும் வீரர்களை சிறப்பான கையாளும் தன்மையும் அவரை சிறந்த கேப்டனாக மாற்றியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மும்பை அணியை வருடாவருடம் பலமாகக் கொண்டு செல்வதில் அவரது அணி தேர்வு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது. அந்த அளவிற்கு சரியான கலவையில் வீரர்களை தெரிவு செய்து வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஓய்வுபெற்ற வீரர்களை யாரையாவது இருவரை நீங்கள் அணியில் சேர்க்க வேண்டுமென்றால் கேப்டனாக யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

sachin

அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா தற்போது உள்ள அணியில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஆல்ரவுண்டர் ஷேன் பொல்லாக் நான் தேர்வு செய்வேன் என்று தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் மும்பை அணிக்காக 2008 ஆம் ஆண்டிலிருந்து பதிமூன்றாம் ஆண்டு வரை ஆறு சீசன்கள் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Pollock 1

78 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2334 ரன்களை குவித்துள்ளார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொல்லாக் பொறுத்தவரை ஒரே ஒரு சீசனில் மட்டும் விளையாடி அதன் பின்னர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.