சச்சின் கங்குலி டிராவிட் போன்று ஜாம்பவான் பட்டியலில் இணைந்த ரோஹித். இமாலய சாதனை – விவரம் இதோ

Rohith-2
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு அணிகளுக்கு இடையேயான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்றுடன் முடிவடைந்த.து முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி நேற்று ஐந்தாவது டி20 போட்டியிலும் 7 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று தொடரை 5-0 என்ற நிலையில் வாஷ் அவுட் செய்தது.

rohith 6

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முக்கிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி நேற்றைய போட்டியில் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக களமிறங்கினார். சாம்சன் துவக்கவீரராக விளையாடி ஆட்டமிழந்ததும் மூன்றாவதாக வீரராக ரோகித் சர்மா வந்து 60 ரன்கள் அடித்தார்.

மேலும் அதிரடியில் அசத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். மேலும் பீல்டிங் போதும் அவர் வராததால் ராகுல் கேப்டன்சி செய்தார். இந்த போட்டியில் ரோகித் சர்மா 31 ரன்கள் அடித்த போது சர்வதேச கிரிக்கெட்டில் 14000 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.

rohith 5

இதன்மூலம் இந்த சாதனையை எட்டிய எட்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் 14000 ரன்களுக்கு மேல் அடுத்த வீரர்கள் பட்டியலில் சச்சின், டிராவிட், கோலி, கங்குலி, சேவாக், அசாருதீன் மற்றும் தோனி ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement