நேற்றைய போட்டியில் தோற்றாலும் சாதனை படைத்த ரோஹித் சர்மா – என்ன சாதனை தெரியுமா ?

Rohith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 34-வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய கொல்கத்தா அணி 15.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்து அட்டகாசமான வெற்றி பெற்றது.

mivskkr

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் முதல் போட்டியில் ஏற்கனவே சென்னை அணியிடம் தோல்வியை சந்தித்த மும்பை அணி தற்போது நேற்று கொல்கத்தா அணிக்கு தோல்வி அடைந்துள்ளதால் இனி வரும் போட்டிகளில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் முடியும்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் முதல் நபராக ஒரு சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

rohith

அதாவது நேற்றைய போட்டியில் 33 ரன்கள் அடித்த ரோகித் சர்மா கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்து உள்ளார். ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக இதுபோன்ற ஒரு பேட்ஸ்மேன் ஆயிரம் ரன்களை கடப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement