ஐ.பி.எல் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த ரோஹித் சர்மா – இப்படி ஒரு சாதனையா ?

Rohith

ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது.

dcvsmi

அதிகபட்சமாக இஷான் கிஷன் 30 பந்துகளில் 55 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 38 பந்துகளில் 51 ரன்களையும் குவித்தனர். இறுதிநேரத்தில் களம் புகுந்த ஹர்டிக் பாண்டியா 14 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 37 ரன்களை குவித்து அசத்தினார். அதன் பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே அடித்தது.

இதனால் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி சார்பாக பும்ரா சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 14 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டிரென்ட் போல்ட் இரண்டு ஓவர்கள் வீசி 9 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக பும்ரா தேர்வானார்.

boult

இந்நிலையில் நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார். அந்த சாதனை யாதெனில் துவக்க வீரராக டிகாக் உடன் களமிறங்கிய ரோஹித் அஸ்வின் வீசிய இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் தான் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 13 முறைகள் அவர் டக் அவுட் ஆகியுள்ளார். அதுமட்டுமின்றி பிளே ஆப் சுற்றில் மூன்று முறை டக் அவுட் ஆகி மோசமான சாதனையில் அவர் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

ashwin

இந்த பட்டியலில் சென்னை வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பெங்களூர் அணியின் வீரர் பார்த்திவ் பட்டேல் ஆகியோர் மூன்று முறை பிளே ஆப் சுற்றில் டக் அவுட் ஆகி முதலிடத்தில் இருந்தனர். தற்போது ரோகித் சர்மா அந்தப் பட்டியலில் அவர்களுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த சீசனில் 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 264 ரன்களை மட்டுமே அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.