இந்த ஐ.பி.எல் ஃபுல்லா ஹர்டிக் பாண்டியா ஏன் பந்துவீசவில்லை – இறுதியாக காரணத்தை சொன்ன ரோஹித்

இந்திய அணியின் ஆல்ரவுண்டரும், மும்பை அணியின் முக்கிய வீரருமான ஹர்டிக் பாண்டியா ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பாண்டியா இந்த ஆண்டு ஐபிஎல் மும்பை அணிக்காக பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்து எதிராணிகளுக்கு பயத்தினை காண்பித்தார்.

Pandya

இருப்பினும் அவர் இந்த தொடர் முழுவதும் பந்துவீச வரவே இல்லை. இந்நிலையில் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இந்த வருடம் முழுவதும் ஏன் பந்துவீச வரவில்லை என்பது குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

ஹர்டிக் பாண்டியா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல சமயங்களில் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். பேட்டிங்கில் சிறப்பாக அவர் ஜொலிக்கிறார். இருப்பினும் அவரால் இந்த ஆண்டு முழுவதும் பந்து வீச முடியவில்லை. அதற்கு காரணம் இருக்கிறது அது யாதெனில் : முதுகில் அவர் செய்துள்ள அறுவை சிகிச்சைக்குப் பின் பந்து வீசியது வீசுவதில் சில அசௌகரியங்களை சந்தித்து வருகிறார்.

Pandya

இதன் காரணமாக தற்போது அவரால் பந்து வீச முடியவில்லை. இருப்பினும் அவர் மீண்டும் பந்து வீசுவதை காண ஆவலுடன் உள்ளேன். அவர் கூடிய விரைவில் முழு உடற்தகுதியுடன் பந்துவீச கூடிய சந்தர்ப்பம் வரும் எனவும் ரோகித் தெரிவித்தார்.

- Advertisement -

Pandya

கடந்த ஆண்டு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பாண்டியா சில வாரங்கள் நடக்க முடியாமல் இருந்த வீடியோ வெளியாகி இருந்தது. அதன் காரணமாக சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்த அவர் தற்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்று பேட்டிங்கில் பட்டையை கிளப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.