Rohith Sharma : விக்கெட்டினை பாதுகாத்து கொள்ள கதகளி ஆடிய ரோஹித்

ஐ.பி.எல் தொடரின் 27 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான

Rohith
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 27 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக டி காக் 52 பந்துகளில் 81 ரன்களை குவித்தார். ரோஹித் 47 ரன்களை அடித்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரரான ரோஹித் 32 பந்துகளில் 47 ரன்களை குவித்தார். ரோஹித் விளையாடி கொண்டிருக்கும் போது கவுதம் வீசிய ஓவரில் 6,4,4 என அடுத்தடுத்து அதிரடி காட்ட அடுத்த பந்தினை வைட் ஆக வீசினார் கவுதம் ஆனால், பந்தை கவனிக்காமல் கிரிசை விட்டு ஏறி வந்த ரோஹித் வைட் ஆக சென்ற பந்து பின்னால் சென்றால் ஸ்டம்பிங் ஆகிவிடுவோம் என்று தன் காலால் பந்தை எட்டி உதைத்தார்.

அவரின் இந்த சமயோஜித புத்தியுடன் கூடிய செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிவரும் ராஜஸ்தான் வெற்றிக்கு அருகில் வந்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement