இது நடந்தால் ஐ.பி.எல் கட்டாயம் நடக்கும். இல்லனா முடியாது – ரோஹித் ஓபன் டாக்

Rohith
- Advertisement -

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. இந்த வைரசிற்கு உலகம் முழுவதும் 25 ஆயிரம் பேர் தற்போது உயிரிழந்துள்ளனர். இதனால் உலகம் முழுவதும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவும் இந்த சிக்கலில் தற்போது தவித்து வருகிறது.

Corona-1

மக்கள் ஒன்றாக கூடினால் இது அதிகம் வருவதால் உலகம் முழுவதும் நடைபெற இருந்த கால்பந்து கூடைப்பந்து மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுப் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கோலாகலமாக நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதி வரை இதற்கான தேதி கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் இந்தியா முழுவதும் மூன்று வாரங்கள் முடங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக பிரபல கிரிக்கெட் வீரர்கள்ள் சமூக வலைதளங்களில் நிம்மதியாக தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

Ipl cup

இந்நிலையில் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா மற்றும் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் நேரடி வீடியோவில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஐபிஎல் தொடர் நடக்குமா நடக்காதா என கெவின் பீட்டர்சன் கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

இதற்கு பதிலளித்த ரோகித் சர்மா : ஒரு கட்டத்தில் எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். இது நடந்தால் தான் ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்புள்ளது, யாருக்கு தெரியும்? என பதிலளித்தார்.

CskvsMi

முன்னதாக ஐபிஎல் தொடர் மார்ச் 29ஆம் தேதி துவங்க இருப்பதாக இருந்தது. ஆனால், வைரஸ் காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போதைக்கு வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவது சாத்தியமில்லை. இதன் காரணமாக இந்த வருடம் ஐபிஎல் தொடர் நடப்பது கேள்விக்குறியே.

Advertisement