பொல்லார்டை விட இவர் பெரிய ஹிட்டரா ? ரோஹித் செய்ஞ்சது தவறு – கொதித்தெழுந்த ரசிகர்கள்

- Advertisement -

ஐபிஎல் தொடரின் 21 ஆவது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை குவித்தது.

rrvsmi

மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் என 79 ரன்கள் குவித்தார். கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்களும், ஹார்டிக் பாண்டியா 30 ரன்களும் எடுத்து அசத்தினார். அதன் பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களை மட்டுமே அடித்தது.

- Advertisement -

இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக ஜாஸ் பட்லர் 44 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரி என 70 ரன்களையும், ஜோப்ரா ஆர்ச்சர் 24 ரன்களும் குவித்தனர். அவர்களை தவிர மற்ற யாரும் 20 ரன்களை கூட அடிக்கவில்லை.

buttler

இந்நிலையில் நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா எடுத்த முடிவு ஒன்று இணையத்தில் ரசிகர்கள் இடையே ஒரு மிகப்பெரிய கேள்வி எழுப்பி உள்ளது. அது யாதனில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகிய வீரர்களின் விக்கெட்டை அடுத்தடுத்து இழந்ததால் அடுத்ததாக யார் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. வழக்கமாக அந்த இடத்தில் பொல்லார்ட் அல்லது ஹர்டிக் பாண்டியா ஆகிய இருவரில் ஒருவர் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் நேற்றைய போட்டியில் அவர்கள் இருவருக்கும் பதிலாக க்ருனால் பாண்டியா 5 ஆவது வீரராக களமிறங்கினார். அவர் இறங்கும் முன் 10 ரன்கள் வீதம் சென்று கொண்டிருந்த ரன்ரேட் அவர் களம் இறங்கிய பிறகு 9 ஆக மாறியது. அதாவது 19 பந்துகளைச் சந்தித்த 17 பந்துகளை சந்தித்த அவர் 12 ரன்களை மட்டுமே அடித்தார். ஆனால் அதன்பிறகு இறங்கிய ஹர்டிக் பண்டியா 19 பந்துகளில் 30 ரன்கள் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் 200 ரன்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரன் ரேட்டை குறைவானது என்று ரசிகர்கள் கருத்தை பதிவு செய்கின்றனர்.

krunal

மேலும் கடந்த ஒரு போட்டியில் 4 பந்துகளை பவுண்டரிக்கு அடித்ததால் க்ருனால் பாண்டியா பெரிய ஹிட்டரா ? அவரை ஏன் முன்கூட்டியே இறக்க வேண்டும் ? என்று ரோகித் சர்மாவின் மீது ரசிகர்கள் விமர்சனங்களை வைத்துள்ளனர். ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் இனியும் விக்கெட்டுகளை இழக்ககூடாது என்பதாலும் இறுதி ஓவர்களில் பாண்டியா, பொல்லார்ட் ஆகியோர் இருக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் அந்த இடத்தில் க்ருனால் பாண்டியாவை ரோகித் சர்மா இறக்கி விட்டார் என்பதே உண்மை.

Advertisement