- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ராகுலோட பெஸ்ட் செஞ்சுரி இதுதான். அவ்ளோ சூப்பரா அவர் விளையாட காரணம் இதுதான் – ரோஹித் புகழாரம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (ஆகஸ்ட் 12ம்) தேதி துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் குவித்துள்ளது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் ராகுல் 127 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். நேற்று இந்திய அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அணியின் எண்ணிக்கை 126 ஆக இருந்தபோது 83 ரன் எடுத்திருந்த ரோகித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் சேர்ந்து 127 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தனர்.

- Advertisement -

இந்நிலையில் ரோஹித் ஆட்டம் இழந்து வெளியேறியதும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் ஆட்டநேர முடிவில் 127 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். அவரது இந்த சதம் குறித்து போட்டி முடிந்து பேசிய ரோகித் சர்மா கூறுகையில் : கேஎல் ராகுல் விளையாடியதிலேயே இதுதான் மிகச் சிறப்பான இன்னிங்ஸ். அவரது சதத்திலேயே சிறந்த சதமும் இதுதான்.

ஏனெனில் இந்த ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்தே தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் ஆட்டத்தை கொண்டுவந்துவிட்டார். நேற்றைய ஆட்ட நேர முடியும் வரை ராகுலின் கவனம் சிறிது அளவுகூட சிதறவில்லை. அவரின் திட்டத்தை செயல்படுத்துவதில் கவனமாக இருந்தார். திட்டத்தை செயல்படுத்துவதில் நீங்கள் கவனமாக இருந்தால் அதனை நீங்கள் முழுமையாக முடிக்கலாம். ராகுலின் சிறப்பான செயல்பாட்டுக்கு அவருடைய போகஸ் தான் காரணம்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ராகுலுக்கு நேற்றைய நாள் அவருடைய நாளாக அமைந்துவிட்டது. அதனை அவர் சரியாக பயன்படுத்தி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விட்டார். என்னுடைய பெஸ்ட் இன்னிங்ஸ் இது என்று நான் சொல்லமாட்டேன். இருப்பினும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த சவாலான சூழ்நிலையில் விளையாடுவது எளிது கிடையாது. இருப்பினும் நல்ல முறையில் துவக்கத்தைத் தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ஆட்டமிழந்தது வருத்தமளிக்கிறது என ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by