உண்மையிலே போலீசுக்கும் அரசாங்கத்துக்கும் நன்றி சொல்லணும்னு நெனச்சா இதை பண்ணுங்க போதும் – பொதுமக்களுக்கு ரோஹித் வேண்டுகோள்

Rohith
- Advertisement -

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி தற்போது மற்றும் அமெரிக்கா மற்றும் இத்தாலியை ஒருவழியாக்கி பெரும் அச்சுறுத்தலை கொடுத்து கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து இந்தியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக பரவ துவங்கியுள்ளதால் உடனடியாக இந்திய அரசாங்கம் இருபத்தொரு நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு வருகிறது.

corona

- Advertisement -

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு இருக்கும் நிலையில் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து தங்களை பாதுகாத்து வருகின்றனர். இருப்பினும் கொரோனா பாதிப்பு இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியாவிலேயே அதிக அளவு மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக மக்கள் கூடும் பகுதிகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவிலேயே மும்பையில் தான் அதிகளவு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அப்பகுதிகளில் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக போலீசாருக்கு ஒத்துழைப்பு தருமாறு மாநில அரசாங்கங்கமும், பிரபலங்கள் பலரும் மக்களுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மும்பை நகர போலீசுக்கு ஆதரவாக இந்திய அணியின் துணை கேப்டன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா ட்வீட் ஒன்றினை செய்துள்ளார்.

- Advertisement -

அதில் அவர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மும்பை போலீசார் ரோந்து பணியில் செல்லும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு மனிதருக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காக நேரம் பார்க்காமல் பணிபுரியும் மும்பை போலீசாருக்கு பெரிய கைதட்டலை கொடுப்போம். அவர்களுக்கு உதவ நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒரே ஒரு விஷயம் தான். அந்தக் கடமை வீட்டில் இருப்பது மட்டும்தான் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் மக்களை வீட்டிற்குள்ளேயே பத்திரமாக இருக்கவும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் ரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் ஒரு தொற்று வைரஸ் என்பதனால் எளிதாக மக்களை சென்றடைய வாய்ப்பு உள்ளது. எனவே மக்கள் வீட்டுக்குள் இருந்தால் இந்த பாதிப்பை தவிர்க்க முடியும் என்ற காரணத்தினாலே அரசாங்கம் கடுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மும்பையில் இருக்கும் நிலைமையை பார்த்தால் மக்கள் வீட்டுக்குள் இல்லாமல் இருந்தால் இன்னும் பல மாதங்களுக்கு மும்பை பெரிய பாதிப்பில் இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement