ரோஹித் சர்மாவிற்கு 12 லட்சம் அபராதம் விதித்து அதிரடி காட்டிய நிர்வாகம் – காரணம் இதுதான்

Rohith
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 9 ஆவது போட்டி நேற்று மாலை 4 மணிக்கு மொஹாலி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கும், மும்பை அணிக்கும் எதிராக நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்களை குவித்தது.

Kxip

- Advertisement -

பிறகு 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை அடித்து எளிதாக வெற்றி பெற்றது. பஞ்சாப் சார்பில் ராகுல் ஆட்டமிழக்காமல் 71 ரன்களை குவித்தார். இதனால் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் விளையாடிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு 12 லட்சம் அபராதமாக விதித்தது ஐ.பி.எல் நிர்வாகம். இதற்கு காரணம் யாதெனில் நேற்றைய போட்டியின் போது பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டு இந்த அபராதம் விதிக்கப்பட்டது. இதனை அதிகாரபூர்வமாக நிரவம் அறிவித்துள்ளது.

Krunal

மேலும், ரோஹித் இதுபோன்று தண்டிக்கப்படுவது முதன்முறை அல்ல. கடந்த தொடரில் நடைபெற்ற போட்டியின்போது இதுபோன்று பந்துவீச நேரமாகிவிட்டது என்று தண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement