சென்னை அணியை சேர்ந்த அவங்க 2 பேர் செய்ததை நாங்க செய்ய தவறிவிட்டோம் – ரோஹித் வருத்தம்

Rohith
- Advertisement -

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டி நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சவுரப் திவாரி 42 ரன்கள் குவித்தார்.

csk-vs-mi

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி துவக்கத்தில் வாட்சன் (4), முரளிவிஜய் (1) என அடுத்தடுத்து ஆட்டமிழழந்து வெளியேற 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சி.எஸ்.கே தடுமாறியது. பின்னர் விளையாடிய டூப்ளெஸ்ஸிஸ் மற்றும் ராயுடு ஆகியோரின் அபார ஆட்டத்தால் சிறப்பான ரன்குவிப்பை வழங்கியது. ராயுடு 48 பந்துகளில் 71 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

டுபிளசிஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இறுதியில் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை குவித்து வெற்றிபெற்றது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் சிஎஸ்கே ரசிகர்களை சற்றும் ஏமாற்றவில்லை.

Rayudu

இந்த போட்டியின் தோல்விக்கு பிறகு பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது : எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பான துவக்கத்தை அப்படியே கொண்டு செல்லவில்லை. சென்னை அணியில் டு பிளிசிஸ் மற்றும் ராயுடு செய்ததை எங்கள் அணி வீரர்கள் செய்ய தவறிவிட்டனர். முதல் 10 ஓவர்களில் 85 ரன்கள் குவித்ததும் ரன் குவிப்பு அதிகரிக்கும் என நினைத்தோம். ஆனால் சிஎஸ்கே அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி ஆட்டத்தை மீண்டும் அவர்கள் பக்கம் கொண்டு சென்றனர்.

Dekock

இந்த போட்டியில் இருந்து சில விடயங்களை நாங்கள் கற்றுக்கொண்டே ஆகவேண்டும். துவக்க நாட்களிலேயே இருப்பதால் இப்போதைக்கு பெரிய பிரச்சினை இல்லை என்றாலும் நாங்கள் தொடரை சிறப்பாகவே ஆரம்பித்ததாக உணர்கிறோம். இந்த போட்டியின் மூலம் இன்னும் சில விடயங்களை நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் மேலும் இந்த போட்டியில் சில தவறுகளை செய்தோம் அடுத்த போட்டியில் இவற்றை எல்லாம் சரி செய்து கொண்டு சிறப்பாக திரும்புவோம் என்று ரோகித் கூறினார்.

Advertisement