என்னை பாத்து எப்படி நீங்க அப்படி சொல்லலாம். தினேஷ் கார்த்திக் கேள்விக்கு – ரோஹித் பளீர் பதிலடி

karthik
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இனிங்ஸில் விளையாடிய இந்திய அணியானது முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 83 ரன்கள் எடுத்து வெளியேறினார். எளிதாக சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 83 ரன்களில் ஆட்டமிழந்து ரோகித் சர்மா வெளியேறினார்.

Rohith-2

- Advertisement -

டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அபாயகரமான ஆட்டக்காரராக விளங்கும் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது மெல்ல மெல்ல தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இப்படி உலகின் தலை சிறந்த வீரராக பார்க்கப்படும் ரோகித் சர்மாவின் மீது எப்போதும் ஒரு குற்றச்சாற்று அவரை பின்தொடர்ந்து கொண்டே வருகிறது. அந்த குற்றச்சாட்டு யாதெனில் அவர் ரன் குவிக்க நேரம் எடுப்பதாகவும், பேட்டிங்கில் சோம்பேறித்தனமும் இருப்பதாகவும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்தில் தங்கி வர்ணனையாளராக பணியாற்றியவர் தினேஷ் கார்த்திக் ரோஹித் சர்மாவிடம் இது குறித்து நேரடியாக கேள்வி எழுப்பினார். அப்போது அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா : நான் பேட்டிங்கில் ரன் குவிக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்வதாக மக்களுக்கு தெரியும். ஆனால் அப்படி கிடையாது. உண்மையிலேயே ஒரு பேட்ஸ்மென் களத்தில் சிறிது நேரம் நின்றால் தான் அதன் பின்னர் ரன்களை குவிக்க முடியும்.

rohith 1

நான் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் போது முடிந்தவரை தயாராகவே இருப்பேன். ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒவ்வொரு பவுலரை எதிர்கொள்ளும்போது பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதன் பின்னரே இயல்பான நிலைக்கு திரும்பி ஷாட்டுகளை விளையாட முடியும். ஒரு பந்து வீச்சாளர் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் போது நான் அவர்களுக்கு எதிராக ஃபுல் ஷாட் அடிக்கிறேன். பேட்ஸ்மேன் சோம்பேறி போல இருந்தால் எப்படி இதுபோன்ற ஷாட்டுகளை விளையாட முடியும்.

Rohith

தொலைக்காட்சிகளில் பார்ப்பதற்கு வேண்டுமானால் நான் சோம்பேறித்தனமாக இருப்பது போல தெரியலாம். ஆனால் களத்தில் அப்படி இல்லை. களத்தில் முழுஉத்வேகத்தில் விளையாடவில்லை என்றால் நம்மால் எதையும் சாதிக்க முடியாது. மேலும் பல காலமாகவே ரோகித் சோம்பேறியாக இருக்கிறார் என்ற வார்த்தையை கேட்டு கொண்டு வருகிறேன். அது ஏன் என்ற காரணம் எனக்கு புரியவில்லை என ரோகித் சர்மா தினேஷ் கார்த்திக்கிடம் நேரடி பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement