நாளை மறுநாள் நடக்கவுள்ள போட்டியில் இமாலய சாதனை படைக்கவுள்ள ரோஹித் – விவரம் இதோ

Rohith

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நாளை மறுதினம் துவங்க உள்ளது. டிசம்பர் 6ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்கும் முதல் டி20 போட்டியில் பலமான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது.

Rohith-1

இந்தப் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா ஒரு சிக்சர் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி ரோஹித் ஒரு சிக்சரை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்சர்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற மிகப்பெரிய சாதனையை அவர் படைப்பார். மேலும் 400 சர்வதேச சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் ரோகித் சர்மா பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Rohith-1

இந்தப் பட்டியலில் அதிக சிக்சர் அடித்த வீரராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் (534) சிக்சர்களுடன் முதலிடத்திலும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடி (476) சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை கையில் வைத்துள்ளார். அதனை முறியடிக்கும் வாய்ப்பும் ரோகித் சர்மாவுக்கு உள்ளதாக கருதப்படுகிறது.

- Advertisement -