டெல்லி அணியை வீழ்த்த ஒரு முக்கிய மாற்றத்தை செய்த ரோஹித். திட்டம் பலிக்குமா ? – விவரம் இதோ

Rohith-1

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி தற்போது துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதி போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ள ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும் மோதுகின்றன.

dcvsmi

இரு அணிகளுமே லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் என்பதால் இரு அணிகளுக்கும் இடையே பலமான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பேட் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது மும்பை அணி பந்து வீசி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் டெல்லி அணி எந்த மாற்றைத்தையும் செய்யாமல் விளையாடுகிறது. ஆனால் மும்பை அணியில் ஒரு முக்கிய மாற்றமாக ராகுல் சாகரை நீக்கிவிட்டு நீக்கி அவருக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நீக்கத்திற்கான காரணத்தையும் ரோஹித் வெளியிட்டுள்ளார்.

Rahul-Chahar

அதன்படி டெல்லி அணியில் இடது கை ஆட்டக்காரர்கள் அதிகம் இருப்பதால் அவர்களுக்கு எதிராக லெக் ஸ்பின்னர் சிறப்பாக பந்து வீச முடியாது என்பதால் அவருக்கு பதிலாக ஆப் ஸ்பின்னர் கொண்டுவரப்பட்டுள்ளார். அவை அனைத்தும் திட்டமிட்டு கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

அவரின் இந்த யோசனை இன்று பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் ஆன மும்பை அணி இம்முறை ஐபிஎல் கைப்பற்றுவோம் என்றும், புதிய வரவாக இருந்தாலும் பலமா விளையாடி வருகிறார்கள் என்பதால் டெல்லி அணியும் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று ரசிகர்களும் ஆவலுடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.