- Advertisement -
இந்திய கிரிக்கெட்

3 ஆவது டி20 போட்டி : கடைசி போட்டிக்கான இந்திய அணியில் 4 மாற்றங்கள் – டாஸிற்கு பிறகு ரோஹித் பேசியது என்ன?

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது பங்கேற்று விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த 2 டி20 போட்டிகளில் இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று 2 க்கு 0 என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று தர்மசலா மைதானத்தில் சில நிமிடங்களுக்கு முன்னர் துவங்கியது.

இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் மோதுகின்றன. கடந்த 2வது போட்டியின் போது இலங்கை அணி 183 ரன்களை குவித்தாலும் இந்திய அணி அதனை எளிதாக சேசிங் செய்து வெற்றி பெற்றதால் இந்த மூன்றாவது போட்டியிலும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது மூன்றாவது டி20 போட்டிக்கான டாஸ் போடப்பட்ட பிறகு இலங்கை அணி டாஸில் வெற்றிபெற்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பந்து வீச தயாராகி வருகிறது. இந்நிலையில் இன்றைய மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

அதன்படி நேற்றைய போட்டியின் போது காயமடைந்த இஷான் கிஷன் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அதோடு இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர்கள் சிராஜ் மற்றும் ஆவேஷ் கான் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய் ஆகிய 4 வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : மைதானத்தை சுத்தி சுத்தி பேனர் மட்டுமில்ல. வேறொரு ஸ்பெஷல் மேட்டரும் இருக்கு – கோலிக்கு காத்திருக்கும் பரிசு

1) ரோஹித் சர்மா, 2) சஞ்சு சாம்சன், 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) ரவீந்திர ஜடேஜா, 5)வெங்கடேஷ் ஐயர், 6) தீபக் ஹூடா, 7) ஹர்ஷல் படேல், 8) ரவி பிஷ்னாய், 9) முகமது சிராஜ், 10) குல்தீப் யாதவ், 11) ஆவேஷ் கான்

- Advertisement -
Published by