Rohith Sharma : 2003 ஆம் ஆண்டு சச்சின் அடித்த ஷாட்டை அப்படியே அடித்த ரோஹித் – வீடியோ

Rohith-2
- Advertisement -

நேற்று நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா அடித்த சிக்ஸ் ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் ஐசிசி பகிர்ந்துள்ளது. அதன்படி 2003 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் ஓவரில் சச்சின் டெண்டுல்கர் ஆஃப் சைடில் சிக்ஸ் ஒன்றினை அடித்தார். அதனைப் போன்றே அச்சு அசலாக நேற்று ரோகித் சர்மா ஆப் சைடில் சிக்ஸ் ஒன்றினை அடித்தார். இந்த இரண்டு சிக்சரையும் ஐ.சி.சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டது. மேலும் யார் சிறந்த சிக்ஸரை அடித்துள்ளார்கள் என்றும் கேள்வியையும் எழுப்பியுள்ளது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் 140 ரன்களும், கோலி 77 ரன்களையும் குவித்தனர்.

rohith

அதன் பின்னர் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 35 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழைய குறுக்கிட்டதால் போட்டி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ஓவர்களில் 136 ரன்கள் அதாவது 40 ஓவர்களில் 302 ரன்கள் அடிக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை மட்டுமே அடித்தது. இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Advertisement