மைதானத்தின் வெளியே சென்ற ஓடும் பேருந்தின் மீது சிக்ஸ் அடித்த ஹிட்மேன் ரோஹித் – வைரலாகும் வீடியோ

Rohith

கிரிக்கெட் ராசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஐ.பி.எல் தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளதால் இந்த தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் வீரர்களும் தற்போது துபாயில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் நான்கு மாதங்களாக எந்த ஒரு தொடரும் நடைபெறாததால் வீரர்கள் பெரும்பாலோனோர் தற்போது மீண்டும் விளையாடுவதை ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் நீண்ட இடைவெளிவிட்டு விளையாட இருப்பதால் அதனை சமாளிக்க அதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துகளை வலைப்பயிற்சியில் சரமாரியாக அடித்து நொறுக்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வலைப்பயிற்சியில் அடித்த சிக்ஸர் ஒன்று ஓடும் மைதானத்தை தாண்டி ஓடும் பேருந்தில் மேற்கூரையில் பட்டது. இதனை வீடியோவாக பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவினை பகுதி பதிந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

சுழற்பந்து வீச்சாளர் ஒருவரின் பந்தை தூக்கி அடித்த ரோகித் சர்மா 95 மீட்டருக்கு மேல் அந்த சிக்சர் விளாசினார். அப்போது அந்த மைதானத்தை தாண்டி ரோட்டின் மீது சென்று கொண்டிருந்த பேருந்தின் மேல் கூரையில் பட்டது. அவர் அடித்த அந்த சிக்ஸர் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -