- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உங்களுக்கு பதில் வேணும்னா அவர்கிட்டயே நேரா கேளுங்க. என்கிட்ட கேக்காதீங்க ப்ளீஸ் – கடுப்பான ரோஹித்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் தோனி. கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்தும் 2016 ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் இருந்து தனது கேப்டன் பதவியை விராட் கோலிக்கு விட்டுக்கொடுத்தார். அதனை தொடர்ந்து விரைவில் ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2019 உலகக்கோப்பை தொடரில் ஆடினார்.

உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு பின்னர் தற்போது வரை அவர் கிரிக்கெட் ஆடுகளத்தின் பக்கமே வரவில்லை. ஐபிஎல் தொடரில் ஆடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தின் முகாமில் பயிற்சி செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில்தான் இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனை தாண்டி இந்த வருடம் ஐபிஎல் தொடர் நடக்குமா என்பது சந்தேகம் தான்.

ஆனால் பல முன்னாள் வீரர்களும் விமர்சகர்களும் டோனியின் இந்திய கிரிக்கெட் அணி கனவு முடிந்து விட்டது, அவர் ஓய்வு பெற்று விடலாம் என்று அவருக்கு அறிவுரை கூறி வருகின்றன.ர் இதனையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாத தோனி எதற்கும் சளைக்காமல் மௌனம் காத்து வருகிறார். இந்நிலையில் அவரது ஓய்வு குறித்து ரோஹித் சர்மாவிடம் இந்திய ரசிகர்கள் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியால் கடுப்பான ரோகித் சர்மா :

எப்போதெல்லாம் தோனி கிரிக்கெட் விளையாட பார்க்கிறாரோ, அப்போதெல்லாம் ரேடாரில் இருந்து மறைந்து விடுகிறார். பாதாளத்திற்கு சென்று பதுங்கி கொள்கிறார். யார் யாருக்கு அவர் மீண்டும் விளையாடுவாரா? இல்லையா? என்பது தெரிந்து கொள்ள வேண்டுமோ, அவர்கள் எல்லாம் அவரிடமே நேரடியாக சென்று கேட்டுக்கொள்ளுங்கள். அவர் ராஞ்சியில் தான் வசிக்கிறார்.

ஆனால் இப்போது செல்லாதீர்கள். இந்த ஊரடங்கு முடிந்தவுடன் கார்,பைக், விமானம் ஏதாவது ஒன்றில் சென்று நேரடியாக அவரிடமே கேட்டு விடுங்கள். அவருக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. நாங்கள் அவரைப் பற்றி எந்த செய்தியும் கேள்விப்படவில்லை. உலக கோப்பை தொடருக்குப் பின்னர் அவரைப் பற்றி நான் எதுவுமே கேள்விப்படவில்லை. எனக்கு தெரியாது என்று செம கடுப்பாக பேசியுள்ளார் ரோகித் சர்மா.

ரோஹித்தின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. மேலும் தொடர்ந்து தோனி குறித்து பலரும் தங்களது கருத்துக்களை கூறிவரும் நிலையில் தோனி இதுவரை தனது ஓய்வு குறித்து எந்த ஒரு கருத்தினையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by