மீண்டும் மீண்டும் சொதப்பும் ரோஹித் சர்மா. இன்றைய போட்டியிலும் ஏற்பட்ட பரிதாபம் – விவரம் இதோ

ashwin

ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கான முதல் குவாலிபயர் போட்டி தற்போது துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், இரண்டாம் இடத்தில் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதி வருகின்றன.

dcvsmi

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஐயர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது முதல் இன்னிங்சை விளையாடி வரும் மும்பை அணி 13 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை 103 இழந்து ரன்களை அடித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் சமீபத்தில் காயமடைந்த ரோகித் சர்மா மீண்டும் களமிறங்கினார்.

காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறாத ரோகித் சர்மா அடுத்தடுத்த போட்டிகளில் இறங்கி வருவது சாதகமான விடயம் என்றாலும் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 4 ரன்கள் மட்டுமே குவித்த ரோஹித் இந்த போட்டியிலும் ஏமாற்றம் அளித்தார்.

rohith

ரோஹித் தான் சந்தித்த முதல் பந்திலேயே அஸ்வினிடம் எல்.பி ஆகி கோல்டன் டக் ஆகி வெளியேறினார். இதனால் அவரது பேட்டிங் பார்ம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. விரைவில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

- Advertisement -