இன்று அரையிறுதியில் 3 அமர்க்களமான சாதனையை படைக்கவுள்ள ஹிட்மேன் – ரோஹித்

Rohith
Advertisement

உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 9 போட்டிகளில் பங்கேற்று 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் இன்று அரையிறுதிப் போட்டியில் மோத உள்ளது.

rohith

இந்த உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் 647 ரன்கள் எடுத்து இந்திய அணியின் ரன் குவிப்புக்கு ஒரு தூணாக விளங்கி வருகிறார். இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது அதிரடியை தொடர்ந்தால் ரோகித் சர்மா 3 இமாலய சாதனைகளை படைத்தார்.

- Advertisement -

முதலில் உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது 673 ரன்கள் எடுத்ததே இதுவரை சாதனையாக உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்றைய போட்டியில் ரோகித் 27 ரன்கள் அடித்தால் அந்த சாதனையை முறியடிப்பார்.

Rohith

மேலும் உலக கோப்பை தொடர்களில் மொத்தமாக சச்சின் ரோகித் சர்மா ஆகியோர் 6 சதங்கள் விளாசி உள்ளனர். இன்றைய போட்டியில் ஒரு சதம் அடித்தால் உலகக்கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைப்பார் மேலும் இன்னும் 53 ரன்கள் அடித்தால் உலக கோப்பை தொடரில் 700 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரோஹித் நிகழ்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement