அவங்க 2 பேருக்கு வாய்ப்பு கொடுக்கணுனா நானும் தவானும் தான் வெளிய உட்காரனும் – நிருபரை கலாய்த்த ரோஹித்

- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 3 ஒருநாள் போட்டிகளும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட வேளையில் ஏற்கனவே ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அங்கு வந்து பயிற்சி மேற்கொண்டது. அப்போது இந்திய அணியின் வீரர்களான ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், நவ்தீப் சைனி ஸ்ரேயாஸ் அய்யர், அக்சர் படேல் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

INDvsWI

- Advertisement -

இதன்காரணமாக தற்போது அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன் காரணமாக இந்திய அணியில் மாற்று வீரர்களாக இஷான் கிஷன், மாயங்க் அகர்வால், ஷாருக்கான் உள்ளிட்ட சில வீரர்கள் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது இந்த முதல் ஒருநாள் போட்டிக்கு முன்பு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கொடுத்த ஒரு பேட்டி இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

அந்தவகையில் இந்த ஒருநாள் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்க பத்திரிகையாளர்களை கேப்டன் ரோஹித் சர்மா சந்தித்தார். அப்போது இந்த தொடரில் இந்திய அணி செயல்படயிருக்கும் விதம் குறித்து பேசிய ரோகித் சர்மா :

rohith 1

அணியில் உள்ள கட்டமைப்பில் பெரிய மாற்றங்கள் செய்ய வேண்டியதில்லை. நாங்கள் எப்போதும் ஒரு சிறந்த அணிதான். எனவே நிச்சயம் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றுவதிலேயே எங்களுடைய தற்போதைய கவனம் இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் டெஸ்ட் கேப்டன் யார் என்று கேட்கிறீர்கள்?

- Advertisement -

அதுகுறித்து தற்போது முடிவு செய்ய நேரம் இல்லை என்றும் தற்போதைக்கு ஒருநாள் தொடரை சரியாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஒரு நிருபர் ரோஹித் சர்மாவிடம் இளம் வீரர்களுக்கு நீங்கள் வாய்ப்பு அளிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க : 2017-ல் விராட் கோலிக்கும் அவருக்கும் இடையே பிளவு இருந்தது உண்மைதான் – டீம் மேனேஜர் ஓபன்டாக்

அதற்கு சற்றும் எதிர்பாராத வகையில் கிண்டலாக பதில் அளித்த ரோஹித் சர்மா : உங்களுக்கு என்ன நானும் ஷிகர் தவானும் வெளியில் அமர வேண்டும். அப்போதுதான் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் துவக்க வீரர்களாக விளையாடுவார்கள் அப்படித்தானே என்று சொல்லி சிரித்தார். அவரின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement