உலககோப்பை தொடரின் 40 ஆவது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், மோர்தசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 314 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக ரோகித் சர்மா 104 ரன்கள், ராகுல் 77 ரன்கள் குவித்தனர்.
பிறகு 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களை மட்டுமே எடுத்தது இதனால் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்த இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் புதிய சாதனை ஒன்றை ரோகித் சர்மா படைத்துள்ளா.ர் அதாவது உலக கோப்பை தொடரில் ஒரு சீசனில் அதிக ஆட்டநாயகன் விருதினை பபெற்ற வீரர் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கருடன் அவர் பகிர்ந்து கொண்டார். இந்த உலக கோப்பை தொடரில் 3 போட்டிகளில் அவர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த சாதனையை முதலிடத்தில் இருப்பது இந்திய அணியில் யுவராஜ் சிங் 2011ஆம் ஆண்டு 4 ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரோகித் சர்மா இந்த தொடரில் அடிக்கும் நான்காவது சதம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.



