ஐ.பி.எல் கோப்பையை கையில் வாங்கியதும் தல தோனியின் ஸ்டைலை கடைப்பிடித்த ரோஹித் – கொண்டாடும் ரசிகர்கள்

mi-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்தது.

MIvsDC

அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 50 பந்துகளில் 65 ரன்களும், பண்ட் 38 பந்துகளில் 56 ரன்கள் குவித்தனர். அவர்களை தவிர மற்ற யாரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. மும்பை அணி சார்பாக டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், குல்டர்நைல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

அதன்பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி டெல்லி அணியின் பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டது. இறுதியில் 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரரான ரோகித் சர்மா 51 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இறுதியில் இஷான் கிஷன் 19 பந்துகளில் 33 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக டிரென்ட் போல்ட் தேர்வானார்.

Ishan kishan

இந்நிலையில் நேற்றைய போட்டியில் பெற்ற இந்த அபார வெற்றிக்குப் பிறகு பரிசளிப்பு விழா முடிந்த பிறகு பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் முக்கிய அதிகாரி ஒருவரின் கையால் இந்த வருட ஐபிஎல் தொடருக்கான கோப்பை வெற்றி பெற்ற அணியின் கேப்டனான ரோஹித் இடம் வழங்கப்பட்டது. அதனை மரியாதையாக பெற்றுக்கொண்ட ரோஹித் அப்போது தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அதன் பின்பு அவர் செய்த காரியம் தற்போது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது சென்னை அணியின் கேப்டன் தோனி எப்போது கோப்பைகளையும் வென்றாலும் அதை இளம் வீரர்கள் இடம் கொடுத்துவிட்டு வீரர்களின் கூட்டத்தில் ஒரு புறம் சென்று நிற்பது வழக்கம். அதேபோன்று நேற்றைய போட்டி முடிந்த பிறகு கோப்பையை கைப்பற்றிய ரோகித் அதனை கொண்டு சென்று இளம் வீரர்களின் கையில் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்த கூறிவிட்டு அணி வீரர்களின் ஒரு ஓரத்தில் தானும் ஒரு நபராக நின்று அந்த வெற்றியைக் கொண்டாடினார்.

mi

ரோஹித்தின் இந்த செயல் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் ரசிகர்கள் ரோஹித்தின் இந்த செயலை வெகுவாக பாராட்டி இணையத்தில் அவரின் இந்த செயலை வைரலாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement