ஒருநாள், டி20 அணியில் இடமில்லை. டெஸ்ட் தொடரில் மட்டும் ரோஹித்துக்கு வாய்ப்பு – அதன் பின்னால் இருக்கும் காரணம் தெரியுமா ?

Rohith

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் துபாயில் இருந்து இந்திய வீரர்கள் நேரடியாக ஆஸ்திரேலியா பயணிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

INDvsAUS

மேலும் இந்த தொடருக்காக அண்மையில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் மூன்று விதமான அணிகளிலும் இந்திய அணியின் முன்னணி வீரரான ரோகித் சர்மாவிற்கு இடம் கிடைக்கவில்லை. காயம் காரணமாக அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது திடீரென ரோகித் சர்மா டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதற்கான பின்னணியில் நடந்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ரோகித் சர்மா இந்திய அணியில் சேர்க்கப்படாமல் அணி அறிவிக்கப்பட்டபோது ரோகித் சர்மா மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடினார். அதுமட்டுமன்றி அவர் அடுத்து வரும் போட்டிகளிலும் விளையாடுவேன் என்று தெரிவித்திருந்தார்.

rohith 1

அதுமட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரும் ரோகித் சர்மாவின் உடற்தகுதி குறித்து சமூக வலைத்தளத்தில் அதிக அளவில் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த தொடர் கேள்விகளின் எதிரொலியாக தற்போது மீண்டும் ரோகித் சர்மா டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் அவருக்கு ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் கொடுக்கப்படாமல் டெஸ்ட் அணியில் மட்டும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ரோஹித்தின் காயம் சரியாக கொஞ்சம் நாட்கள் ஆகும் என்பதாலும் டெஸ்ட் போட்டியில் மீண்டும் அவர் முழுஉடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதாலும் அவருக்கு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஓய்வு கொடுக்கப்பட்டு டெஸ்ட் போட்டியில் மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்மின்றி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் அவர் கேப்டனாக செயல்படவும் வாய்ப்புள்ளது.

Rohith

மேலும் இதுதொடர்பாக வெளியிடப்பட்ட பிசிசிஐயின் அறிக்கையில் : ரோஹித்தின் உடல்நிலையை பிசிசிஐ மருத்துவ குழு கண்காணித்து வருவதாகவும், அதன்படியே அவர் டெஸ்ட் தொடருக்கான அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ரோகித் ஷர்மாவிடம் பேசி உள்ளோம் எனத் தெரிவித்துள்ளது. இதனால் தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் ரோகித் விளையாடுவது உறுதியாகி உள்ளது.