ரோஹித்துக்கு 100 ஆவது டி20 போட்டிக்கான தொப்பியை யார் வழங்கியது தெரியுமா ? – பார்த்தா ஆச்சரியப்படுவீங்க

Rohith

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மாவின் அபார ஆட்டத்தின் மூலம் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

Dhawan

இந்த போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்றதன் மூலம் 100 ஆவது டி20 போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் படைத்தார். இந்த சாதனை நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் இந்த 100 ஆவது போட்டிக்கான தொப்பியை அவரிடம் வழங்கியது யார் என்றால் இந்திய அணியின் இளம் வீரரான ஷிவம் துபே தான். அவர் இதற்கு முன்னர் இந்திய அணிக்காக டெல்லி போட்டியில் அறிமுகமானார்.

இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய இவரை ரோஹித் நூறாவது போட்டியின் தொப்பியை கொடுக்கச் சொல்லி இந்திய கிரிக்கெட் வாரியம் அவரிடம் கேட்டுக் கொண்டது. அவரும் அதற்க்கு சம்மதித்து தனது இரண்டாவது போட்டியில் பங்கேற்ற ஷிவம் துபே ரோகித் சர்மாவிற்கு நூறாவது போட்டிக்கான தொப்பியை வழங்கி அவரை கவுரவப்படுத்தினார்.

இதனை ரோகித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படமாக பகிர்ந்து எந்த ஃபார்மட் இருந்தாலும் இந்தியாவுக்காக விளையாடுவது பெருமை என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். ரோஹித்தின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -