அவுட் கொடுத்த அம்பயர். அவர் வாயாலே நாட் அவுட் சொல்ல வைத்த ரோஹித்

rohith 1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டி தற்போது டெல்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி சேசிங் செய்ய இந்த மைதானம் ஒத்துழைக்கும் என்பதனால் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் என்ற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. சென்னை அணி சார்பாக டுப்லஸ்ஸிஸ்(50), மொயின் அலி(58) மற்றும் ராயுடு(72) என அதிரடியில் அசத்த இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 218 எடுத்து.

- Advertisement -

அதனை தொடர்ந்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பிரம்மாண்ட இலக்கு மும்பை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. துவக்க வீரர்களாக களமிறங்கிய டிகாக் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இந்த ரன்களை சேஸிங் செய்யவேண்டுமென்றால் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடிய வரவேண்டிய காரணத்தினால் ஆரம்பத்திலிருந்தே அடித்து ஆடினார்.

இந்நிலையில் இந்த போட்டியின் தீபக் சாகர் வீசிய மூன்றாவது ஓவரின் 4வது பந்தை சந்தித்த ரோஹித் பந்தை தவறவிட்டு பேடில் வாங்க களத்திலிருந்த அம்பயர் ரோகித் அவுட் என்று அறிவித்தார். ஆனால் அடுத்த சில நொடிகளில் ரோஹித் டி.ஆர்.எஸ் முறையில் ரிவ்யூ கேட்க 3வது அம்பயர் பந்தினை ரீபிளே செய்து பார்த்தார். அதில் பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது.

இதன் காரணமாக டிஆர்எஸ் முடிவின் மூலம் ரோகித் சர்மா இந்த அவுட்டில் இருந்து தப்பித்தார். முதலில் அவுட் என்ற அறிவித்த அம்பயரே மீண்டும் ரோஹித் நாட் அவுட் என்று அறிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement