அடப்பாவமே ரோஹித்துக்கு இப்படி ஒரு நிலைமையா ? அப்போ ஐ.பி.எல் தொடரும் கோவிந்தாவா – வருத்தத்தில் ரசிகர்கள்

Rohith-1
- Advertisement -

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை படுமோசமாக இழந்ததன் காரணமாக கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது இந்திய அணி.

rohith 5

- Advertisement -

வரும் 12 ஆம் தேதி துவங்க உள்ள இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. கடந்த ஆறு மாதங்களாக அணியில் இடம்பெறாமல் இருந்த ஹர்டிக் பண்டியா, புவனேஷ்வர் குமார் மற்றும் தவான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இந்த புதிய அணியினை சுனில் ஜோஷி தலைமையிலான புதிய தேர்வுக்குழு தேர்வு செய்தது. இந்த இந்திய அணியில் துவக்க வீரர் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக பிரித்வி ஷா மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

Rohith-4

ரோகித் இல்லாததால் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி ஓபனிங்கில் மிகவும் பாதிக்கப்பட்டது என்பது உண்மைதான். இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்கா தொடர்பிலும் அவர் இடம்பெறாதது குறித்து வெளியான தகவலின்படி நியூசிலாந்தில் இருந்து திரும்பிய ரோகித் சர்மா தனது காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் அந்த காயத்தின் தீவிரம் இன்னும் இருப்பதால் அவர் குணமடைய இன்னும் சில வாரங்கள் தேவைப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

மேலும் 29ஆம் தேதி ஐபிஎல் தொடர் துவங்க உள்ளதால் அதற்குள் அவர் இந்த காயத்திலிருந்து முற்றிலும் தயாராகி ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோஹித் சர்மா குறித்து எந்த ஒரு தரப்பிலும் இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

rohith 6

இதனால் ரோஹித்தின் ரசிகர்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர். ஏனெனில் தென்னாபிரிக்க தொடர் முடிந்து ஒரு வார இடைவெளியில் மும்பை அணி முதல் போட்டியில் சென்னை அணியுடன் முதல் போட்டியில் மோத உள்ளது. இதனால் ஐ.பி.எல் தொடரின் ஆரம்ப போட்டிகள் சிலவற்றையும் அவர் தவறவிட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement