தோத்தாலும் பரவாயில்ல. அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரு – உறுதி செய்த கேப்டன் ரோஹித் சர்மா

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்த வேளையில் நேற்று அதே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

INDvsWI

- Advertisement -

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இறுதியில் 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்காரணமாக 44 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் பந்து வீச்சில் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரசித் கிருஷ்ணா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் அடுத்த போட்டியில் ஷிகர் தவான் விளையாடுவது குறித்தும் பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

dhawan

நாங்கள் இந்தப்போட்டியில் சில விடயங்களை மாற்றிப் பார்க்க ஆசைப்பட்டோம். அந்தவகையில் பண்ட் இந்த போட்டியில் துவக்க வீரராக விளையாடினார். இதுபோன்று மாற்றங்களை செய்யும்போது ஒரு சில போட்டிகளில் தோற்றாலும் கூட அது பரவாயில்லை. புதிய முயற்சிகளை செய்த திருப்பதி நம்மிடமிருக்கும்.

- Advertisement -

அடுத்த போட்டியில் நிச்சயம் ஷிகர் தவான் அணிக்கு திரும்பிவிடுவார். அப்படி அவர் துவக்க வீரராக வரும் வேளையில் அணியில் இருந்து ஒரு வீரர் வெளியேற்றப்படுவார் என்றும் ரோகித் சர்மா உறுதி செய்தார்.

இதையும் படிங்க : என்னை ஏலத்தில் நம்பி வாங்கினால் 100% மேட்ச்களை வின் பண்ணி தருவேன் – மும்பை வீரர் உறுதி

இதன்காரணமாக நிச்சயம் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்குவது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் சோபிக்க தவறிய ரிஷப் பண்ட் கட்டாயம் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று தெரிகிறது.

Advertisement