இங்கிலாந்து மைதானங்களில் ரோஹித் சர்மா எப்படி விளையாடுவார் ? – சிறுவயது பயிற்சியாளர் பேட்டி

ro-coach
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக ஜூன் மாதம் 18ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ளது. இந்த இரண்டு முக்கியமான தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி தற்போது மும்பையில் குவாரண்டைன் நாட்களில் இருந்து வருகின்றனர்.

- Advertisement -

குவாரன்டைன் நாட்கள் முடிந்து ஜூன் இரண்டாம் தேதி இங்கிலாந்து செல்லும் வீரர்கள் முதலில் நியூசிலாந்து அணியையும், அதன் பின்னர் இங்கிலாந்து அணியும் அடுத்தடுத்து சந்தித்து விளையாட இருக்கிறது. 6 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த மிகப்பெரிய தொடரில் இந்திய அணி எவ்வாறு விளையாடும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு அடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் அந்த மண்ணில் இங்கிலாந்து அணியை எதிர்த்து எவ்வாறு விளையாடப் போகிறது என்பது குறித்தும் அதிக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் ரோகித் சர்மா எவ்வாறு விளையாடுவார் என்பது குறித்து அவரது இளம்வயது பயிற்சியாளரான தினேஷ் லாட் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Rohith

ரோஹித் இங்கிலாந்தில் சிறப்பாக கவனம் செலுத்தி விளையாட வேண்டும். அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது சுழற்பந்து வீச்சில் பலரும் சிரமப்பட்டனர். ஆனால் அதனை சமாளித்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு ரோஹித் சிறப்பாக விளையாடினார். அதேபோன்று வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் உள்ள இங்கிலாந்திலும் ரோஹித் விரைவில் மைதானத்தின் தன்மையை புரிந்து கொண்டு அந்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு தனது ஆட்டத்தை மாற்றிக்கொள்வார்.

rohith 1

சூழ்நிலைக்கு ஏற்ப மைதானத்தின் தன்மையை புரிந்து சிறப்பான ஆட்டத்தை நிச்சயம் வெளிப்படுத்துவார் என தான் நம்புவதாக அவரது பயிற்சியாளர் கூறினார். மேலும் இங்கிலாந்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு பிரத்தியேகமான வலைப்பயிற்சியை ரோகித் நிச்சயம் அங்கு சென்று மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement