ரோஹித் இன்று அடித்த சதத்தில் இப்படி ஒரு சாதனையா ? நிச்சயம் நீங்கள் கவனிக்காத சாதனை -விவரம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி தற்போது ராஞ்சி மைதானத்தில் இன்று துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி தோல்வி தொடரை பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Rahane

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 117 ரன்களுடனும், ரஹானே 83 ரன்ங்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா சதம் அடித்ததுடன் சிக்ஸர் அடித்ததிலும் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி சிக்ஸ் அடித்து தனது சதத்தை நிறைவு செய்த ரோஹித் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மயரின் சாதனையை இன்று முறியடித்தார்.

Ind

அதன்படி இதற்கு முன்னதாக வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் 15 சிக்சர்கள் விளாசி ஒரே தொடரில் அதிக சிக்ஸர்கள் அடுத்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். அதனை தற்போது 16 சிக்சர்கள் அடித்தது மூலம் ரோஹித் இன்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement